தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! - தமிழகத்தில் 24 மணிநேரத்தில் மழை! - Storm Warning

கடலூர்: தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் கடலூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடலூரில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

By

Published : Sep 18, 2019, 3:58 PM IST

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த 24 மணிநேரத்தில், பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 12 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மூன்றாம் எண் கூண்டு ஏற்றம் - புயல் எச்சரிக்கை
இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்த மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு என்பது திடீரென காற்றோடு கூடிய கன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கைக்கான குறியீடு ஆகும்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details