தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீன்பிடி திருவிழா: 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! - கடலூர் செய்திகள்

கடலூர் பணையாந்தூர் ஏரியில் கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் நடந்த மீன்பிடி திருவிழாவில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மீன்பிடி திருவிழா
மீன்பிடி திருவிழா

By

Published : Jul 6, 2021, 1:28 PM IST

கடலூர்: விருத்தாசலம் அடுத்த திட்டக்குடி பகுதிக்குள்பட்ட பணையாந்தூரிலுள்ள ஏரியில் மீன் பிடித்திருவிழா இன்று (ஜூலை 6) காலை நடைபெற்றது. இதில் ஒரங்கூர், கொரக்கவாடி, லெட்சுமணாபுரம், சிறுபாக்கம், கண்டமத்தான், வள்ளிமதுரம், மங்களூர், பட்டாக்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

வருடந்தோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 20 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அனைவரும் 10 முதல் 20 கிலோ மீன்கள் வரை பிடித்துச் செல்வது வழக்கம். ஆனால், இந்த வருடம் மீன்பிடி திருவிழாவில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் பலரும் மீன்கள் கிடைக்காத ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

கரோனா விதிமுறைகள் எங்கே?

எனவே வருகிற ஆண்டிலிருந்து ஏரிக்கு காவலாளி அமைத்து, பொதுமக்கள் அனைவருக்கும் மீன்கள் கிடைக்கும் வண்ணம் அதிக மீன் குஞ்சுகளை ஏரியில் விட வேண்டும் என மீன்பிடித் திருவிழாவில் கலந்துகொண்ட கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

மீன்பிடி திருவிழா

மேலும், மீன்பிடித் திருவிழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காதது தொற்று பரவுவதற்கு வழிவகுப்பதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: மீன் பிடிப்பதில் தகராறு - தீ வைத்து வாகனங்கள் நாசம்

ABOUT THE AUTHOR

...view details