ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் என்பது ஏப்ரல் 14 முதல் ஜூன் 14 வரை 60 நாள்கள் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் நேற்றுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவு பெற்றது.
இந்நிலையில் கடலுார் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் தாழங்குடா தேவனாம்பட்டினம் உள்ளிட்ட 49 கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை
மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு தயார் நிலையில் வைத்துள்ளனர்.
மேலும் மீனவர்கள் நான்கு நாட்களுக்கு மேல் கடலில் தங்க உள்ளதால் அவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை சேகரித்து வைத்திருக்கின்றனர். இன்று நள்ளிரவு முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் நான்கு அல்லது ஐந்து கழித்து மீண்டும் கரை திரும்புவர்.
இதையும் படிங்க:ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் டார்ச் லைட் அடித்து ஆர்ப்பாட்டம்!