கடலூர்:மாவட்டத்தில் மொத்தம்49 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையும் மற்ற கிராமங்கள் இழு வலையையும் பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன.
அரசின் உத்தரவுப்படி அதிக குதிரை திறன் கொண்ட என்ஜின் விசைப்படகுகள் ஐந்து நாட்டிக்கல் தொலைவுக்கு மேல்தான் மீன் பிடிக்க பயன்படுத்தப்பட வேண்டும். இதில், இழு வலையும் சுருக்கு மடி வலையும் அதிக திறன் கொண்டவை என்பதனால் தமிழ்நாடு அரசு சுருக்குமடி வலைக்கு மட்டும் தடை விதித்து இழு வலைக்கு அனுமதியளித்துள்ளது.
இழு வலை பயன்படுத்தும்போது சிறு படகுகள், வலைகள் அதிகம் பழுது ஏற்படுகிறது. இதனால் சுருக்குமடி வலைக்கு இணையான இழு வலையையும் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று (ஜூலை.09) கடலூர் துறைமுகத்தில் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட கிராம மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.