தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’சுருக்குமடி வலையால் வாழ்வாதாரம் பாதிக்கிறது’ - நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை - சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதைத் தடுக்க வேண்டும்

கடலூர்: சுருக்குவலை, இரட்டை மடிப்பு வலை ஆகியவற்றைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதைத் தடுக்க வேண்டுமென 32 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

By

Published : Feb 21, 2020, 9:37 AM IST

கடலூரில் தாழங்குடா, அக்கரை கோரி, ராசா பேட்டை உள்ளிட்ட 32 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், “நாங்கள் கடலில் மீன்பிடித்து பிழைப்பு நடத்திவருகிறோம். எங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் விதமாக ஒரு சில கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பணக்காரர்களின் உதவியுடன் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு வலை, இரட்டை மடிப்பு வலை ஆகியவற்றைப் பயன்படுத்தியும், படகுகளில் விரைவு என்ஜினை பயன்படுத்தியும் மீன்பிடிக்கின்றனர்.

இதனால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மீன்பிடித் தொழில் அழியும் நிலையில் உள்ளது. மேற்கூறிய வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதை அரசு தடை செய்திருந்தாலும், ஒரு சிலர் அதைப் பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். எனவே இதனைத் தடுத்துநிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details