கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தியும், மற்ற கிராமங்களில் இழு வலையை பயன்படுத்தியும் மீன்களைப் பிடித்து வருகின்றனர்.
ஆனால் ஒன்றிய, மாநில அரசுகள் கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கோடு சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதித்தது. இதனை எதிர்த்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
மீனவர்கள் போராட்டம்
இந்நிலையில், இன்று (ஜூலை 17) 10க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் சுருக்கு மடி வலை தடையை உடனடியாக நீக்க வலியுறுத்தி தேவனாம்பட்டினம் சில்வர் பீச் கடற்கரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கனேஷ் தலைமையில் இரண்டு துணை கண்காணிப்பாளர் உள்பட 450 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராடத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கடல் அட்டையைக் கடத்த முயன்ற இருவர் கைது!