கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சியின் நிலக்கரி சுரங்கம் உள்ளது .நேற்று வழக்கம் போல முதலாவது சுரங்கத்தில் நிலக்கரி வெட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.