தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடையாள அட்டை இல்லாமல் சுற்றிய 50 பேரிடம் அபராதம் வசூல் - fine collected from people roaming without colour id cards

கடலூர்: மாவட்ட நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்ட வண்ண அடையாள அட்டை இல்லாமல் வெளியே சுற்றிய 50 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

fine collected in cuddalore from people without id card
fine collected in cuddalore from people without id card

By

Published : Apr 25, 2020, 1:35 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையைத் தவிர யாரும் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டது.

ஆனாலும் அரசு அறிவிப்பை மீறி பெரும்பாலானோர் வெளியே சுற்றுவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்று வண்ண அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த அட்டைப்படி ஒரு நாளைக்கு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே ஒரு முறை அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு வெளியே வர அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையர் பிரபாகரன் தலைமையில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு வண்ண அடையாள அட்டை வழங்கப்பட்டது.

அடையாள அட்டை இல்லாமல் சுற்றியோரிடம் அபராதம்

அது இல்லாமல் வெளியே வந்தால் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

இதைதொடர்ந்து பிரபாகரன் தலைமையிலான குழுக்கள் நெல்லிக்குப்பம் நகராட்சிப் பகுதியில் ஆய்வு செய்தபோது வண்ண அடையாள அட்டை இல்லாமல் வெளியே வந்த 50க்கும் மேற்பட்டோருக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க... தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.1.22 கோடி அபராதம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details