தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதிக்கப்பட்ட விவசாயம் - என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் தர்ணா

கடலூர்: நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து சுரங்கம் 2-இன் முன்பு விவசாயிகள் சாலையில் அமர்நது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட விவசாயம் - என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் தர்ணா
பாதிக்கப்பட்ட விவசாயம் - என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் தர்ணா

By

Published : Feb 20, 2020, 2:23 PM IST

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி சுரங்கம் 2 இயங்கி வருகிறது. இந்த இரண்டாவது சுரங்கத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட மணல்களை அருகாமையில் மலைபோல் குவித்து வைத்துள்ளனர். குவித்து வைக்கப்பட்டுள்ள இந்த சவுடு மணலில் மழைக்காலங்களில் சரிவு ஏற்பட்டு அருகாமையில் உள்ள விவசாய நிலங்களில் படிகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள 2500 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டு, விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

விவசாய நிலத்தில் படிந்துள்ள சவுடு மணலை அகற்றக் கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை என்எல்சி நிர்வாகம் வழங்கக் கோரியும் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நடவடிக்கை எடுக்காத என்எல்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நெய்வேலி சுரங்கம் இரண்டு முன்பு கொம்பாடிகுப்பம், அரசுகுழி, கம்மாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் 100 க்கு மேற்பபட்டோர் நெய்வேலி - விருத்தாசலம் சாலையில் அமர்நது தர்ணா போராட்டத்தில் ஈடுபடடு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட விவசாயம் - என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் தர்ணா

ABOUT THE AUTHOR

...view details