கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஒணங்குப்பம் கல்குளம்,டிவி நல்லூர், பூதம் பாடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட விளை நிலங்களில் நெற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் அதிக மழை பெய்தது. இந்நிலையில் நேற்று(நவ-11) பெய்த அதிகனமழையின் காரணமாக நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மழை நீர் மற்றும் குறிஞ்சிப்பாடி சுற்று வட்டாரங்களில் பெய்த மழை நீர் கிராமங்களில் உள்ள நெல் வயல்களில் சூழ்ந்தது தீவு போல் காணப்படுகிறது.
நெற்பயிர்கள் இடுப்பு அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.