தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூர் மாவட்ட ஆட்சியர் வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு! - cuddalore collector car accident

கடலூர்: திட்டப் பணிகளை ஆய்வு செய்ய சென்ற மாவட்ட ஆட்சித் தலைவர் வாகனம் மோதி விவசாயி உயிரிழந்தார்.

cuddalore collector car accident
cuddalore collector car accident

By

Published : Feb 8, 2020, 10:33 AM IST

கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் கார் சோழதரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அங்கு நடந்து சென்ற விவசாயி ராமசாமியின் மீது மோதியது.

உடனே அருகிலிருந்தவர்கள் அவரை அருகிலுள்ள தனியார் அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆட்சியர் வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு!

இதையடுத்து ராமசாமியின் உறவினர்கள் சோழதரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு: கிராம நிர்வாக அலுவலர் உள்பட இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details