தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி டாஸ்மாக் டோக்கன் அச்சடித்து மது வாங்க வந்த 10 பேர் கைது! - போலி டாஸ்மாக் டோக்கன் அச்சடித்து

தமிழ்நாடு அரசு சார்பில் மது வாங்க டோக்கன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த டோக்கனை போலியாக அச்சடித்து மதுவாங்கச் சென்ற 10 பேரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

fake tasmac token
fake tasmac token

By

Published : May 16, 2020, 5:55 PM IST

Updated : May 16, 2020, 10:04 PM IST

கடலூர்: போலியாக டோக்கன் அச்சடித்து மது வாங்கச் சென்ற 10 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கரோனா நோய்க் கிருமியின் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய கடைகளைத் தவிர அரசு மதுக் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து மே 7, 8 ஆகிய தேதிகளில் மதுபானக் கடைகளை திறப்பதற்கு அரசு உத்தரவிட்டது.

இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து பலத்த எதிர்ப்பு வந்தது. ஆனால் அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. சில அரசியல் கட்சிகள் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் - காவல் துறையில் புகார்

அம்மனுக்களை விசாரித்த நீதிபதிகள் மதுபானக் கடைகளை அடைப்பதற்கு உத்தரவிட்டது. இதற்கு எதிராக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் மதுபானக் கடை திறப்பதற்கு எந்த தடையுமில்லை என தெரிவித்த பிறகு இன்று மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன.

கடலூரில் காலை 7 மணி முதலே மதுப் பிரியர்கள் கடை முன் குவிந்தனர். அவர்களுக்கு கடையின் சார்பாக 500 டோக்கன்கள் வழங்கப்பட்டன. அதனைக் கொண்டு டோக்கன்களை வண்ண நகலெடுத்து, சில மதுப் பிரியர்கள் மது வாங்க வந்தனர். இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடம் சென்று போலி டோக்கன் வைத்திருந்த 10க்கும் மேற்பட்டோரை கைதுசெய்தனர்.

Last Updated : May 16, 2020, 10:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details