தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போலி மந்திரவாதி கைது! - போலி மந்திரவாதி கைது

கடலூர்: புவனகிரி அருகே தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போலி மந்திரவாதியை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

பெண்களிடம் சில்மிஷம் செய்த போலி மந்திரவாதி கைது
பெண்களிடம் சில்மிஷம் செய்த போலி மந்திரவாதி கைது

By

Published : Feb 2, 2021, 9:18 AM IST

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகேவுள்ள ஓடாக்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மனநிலை சரியில்லாத தங்களது குழந்தையை மந்திரவாதி ஒருவரிடம் காண்பித்து குணப்படுத்துமாறு கேட்டுள்ளனர். அப்போது, தனது மாந்ரீகத்தின் மூலம் நோயைச் சரிசெய்து விடுவதாக அவர் கூறியுள்ளார்.

இதனை நம்பிய அக்குடும்பத்தினர், மந்திரவாதி கூறியபடி நடந்துள்ளனர். இந்நிலையில், அவர் திடீரென அங்குள்ள பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்தாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் ஒரத்தூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், போலி மந்திரவாதியைக் கைதுசெய்து, காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்துவருகிறார்கள்.

விசாரணையில் அவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, திருப்பணி வட்டாரம் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் சக்திவேல் என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார்: பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details