கடலூர் மாவட்ட ஆட்சியராக செயல்பட்டு வருபவர் சந்திரசேகரன் சகா மூரி. இவரது பெயரில் Chandrasekhar sakhamuri IAS என்ற பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டு இதில் பல்வேறு தகவல்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த சமூகவலைதள கணக்கு மாவட்ட ஆட்சியர் பெயரில் இருப்பதால் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியரின் பெயரை தவறாக பயன்படுத்தி, அவரது புகைப்படங்களையும் பதிவு செய்வதாக பலர் குற்றஞ்சாட்டினர்.