தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாம்பு கடித்து முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு - ex army man dies after snake bites him

கடலூர்: வடலூரில் பாம்பு கடித்து முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடலூரில் பாம்பு கடித்து முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு
வடலூரில் பாம்பு கடித்து முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு

By

Published : Jan 24, 2021, 11:46 PM IST

கடலூர் மாவட்டம் வடலூர் வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் அசோக் (38). இவர் ராணுவத்தில்17 வருடம் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றுள்ளார். இவர் பாம்பு பிடிப்பதில் ஆர்வமாக செயல்பட்டு வந்துள்ளார். இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் பாம்பு புகுந்து தகவல் கொடுத்தால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆர்வமாக பாம்பை உயிரோடு பிடித்த காட்டுப் பகுதியில் விட்டுவிடுவார்.

இந்த நிலையில், நேற்று (ஜன. 23) வடலூர் அருகே கோட்டைக்கரை பகுதியில் உள்ள வீட்டில் பூநாகம் ஒன்று பாம்பு புகுந்துள்ளது. அதனை நேற்றிரவு அசோக் பிடிக்க முற்பட்டுள்ளார். பாம்பை பிடித்து சாக்கில் அடைக்கும் போது சாக்கு ஓட்டை வழியாக பாம்பு வெளியே வந்து அசோக்கை கடித்துள்ளது.

இதனை அடுத்து அசோக்குமார் தன்னுடைய நாட்டு வைத்தியம் மருந்தை அருந்திவிட்டு அருகிலுள்ள குறிஞ்சிப்பாடி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் பாம்பு கடித்ததில் திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியது.

இதையும் படிங்க:தமிழ் கலாசாரத்தை பிரதமர் மோடி அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்: ராகுல் காந்தி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details