வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு! - வாக்கு எண்ணும் மையம்
கடலூர்: வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்று அடுக்கு பாதுகாப்பும், துணை ராணுவ படையினரின் கண்காணிப்பு இருக்கும் எனத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

கடலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1470 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தது. வாக்குப்பதிவு நிறைவு செய்தபின் வாக்குப்பதிவு இயந்திரத்தை, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனத்தில் காவல்துறை பாதுகாப்புடன் கடலூரில் உள்ள தேவனாம் பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரிக்குப் பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.
பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர், அன்புச்செல்வன் கட்சி நிர்வாகிகள் பார்வையின் முன்னிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள தனியறையில், அனைத்து வாக்கு பெட்டிகளையும் வைத்து சீல் வைத்தனர். அதன் பின்னர் வாக்கு எண்ணும் மையத்திற்குத் துணை ராணுவம் சேர்த்து மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரம் கண்காணிக்கக்கூடிய வகையில், அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.