விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வாங்கித் தரப்படும் - அமைச்சர் சம்பத்
கடலுார்: ஆரூரான் சர்க்கரை ஆலையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வாங்கித் தரப்படும் என கடலூரில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பேட்டியளித்துள்ளார்.
கடலூரில் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். இந்த வேலைவாய்ப்பு முகாமை தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.
இந்தத் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 120 தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 1,442 பொறியியல் பட்டதாரிகள், 2,690 அறிவியல்; கலைப் பட்டதாரிகள், 282 கலை; அறிவியல் முதுகலைப் பட்டதாரிகள், 1,306 பட்டயத் துறையில் பயின்றவர்கள், மூன்றாயிரத்து 475 பத்தாம் வகுப்பு - பன்னிரெண்டாம் வகுப்பு கல்வித் தகுதி உடைய மொத்தம் 10 ஆயிரத்து 694 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.