தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நம் கூட்டணிக்கு வாக்களிக்க மக்களை வலியுறுத்துங்க! தொண்டர்களிடம் கேட்டுக்கொண்ட முத்தரசன் - Election preparation

கடலூர்:  விவசாயம், சிறுதொழில்கள் ஆகியவற்றை பாதுகாத்திட தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இரா.முத்தரசன்

By

Published : Mar 25, 2019, 10:25 AM IST

கடலூர் மாவட்டம், பண்ருட்டி தனியார் திருமண மண்டபத்தில் கடலூர், சிதம்பரம்நாடாளுமன்றத்தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுவது தொடர்பாகஆலோசனைக்கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில்,

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நமது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியினர் பரப்புரைசெய்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய அனைத்து உறுப்பினர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

மேலும் அரசியல் சாசன உரிமைகள் பாதுகாப்பு, மதச்சார்பற்ற ஜனநாயக ஒற்றுமை நிலைநாட்டிட, விவசாயம், சிறுதொழில்கள் ஆகியவற்றை பாதுகாத்திட தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


ABOUT THE AUTHOR

...view details