கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கொளக்குடி கிராமத்தில் செட்டித் தெருவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (60) என்பவர் தனியாக வசித்து வந்தார். இவரது மனைவி, மகன், மகள்கள் அனைவரும் வேறு ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயச்சந்திரன் அவரது வீட்டில் தலையில் கனமான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தலை பிளந்து, முகம் சிதைந்து இறந்து கிடந்தார். இதனை அப்பகுதி வழியாக சென்றவர்கள் கண்டு மருதூர் காவல் துறையினருக்கு தகவலளித்தனர்.
மோப்ப நாய் உதவியுடன் விசாரணை
இதனையடுத்து சிதம்பரம் துணை காவல் ஆணையர் (DSP) ரமேஷ்ராஜ் தலைமையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர்கள் மோப்ப நாயுடன் விசாரனை மேற்கொண்டனர். அப்போது, மோப்ப நாய் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடி, ஒரு வீட்டின் முன்பு படுத்தது.
இதனையடுத்து துணை காவல் ஆணையர் (DSP) ரமேஷ்ராஜ் புவனகிரி, காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி, மருதூர் உதவி ஆய்வாளர் சண்முகம், துணை காவல் ஆணையர் (DSP) தனிப்பிரிவு காவலர்கள் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குடியிருப்புப் பகுதியில் நடந்ததால் பரபரப்பு நிலவியது.