தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலுக்குள் செல்ல தடையால் வாழ்வாதாரம் பாதிப்பு: மீனவர்கள் வேதனை!

கடலூர்: படகு எரிப்பு விவகாரத்தில் மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

band to fishing

By

Published : Jul 30, 2019, 4:41 PM IST


கடலூரில் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி ஒரு சில கிராம மீனவர்கள் மீன்பிடித்து விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் கிராம மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் எம்ஜிஆர் திட்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுக்கு தீ வைத்தனர்.

கடலுக்குள் செல்ல தடையால் வாழ்வாதாரம் பாதிப்பு: மீனவர்கள் வேதனை

இதனால் அங்கு பதட்டம் நீடித்ததைத் தொடர்ந்து ஏடிஎஸ்பி பாண்டியன், சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டது. இதைத்தொடர்ந்து மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் இந்த உத்தரவால் தங்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details