தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்குவரத்து வீதிமீறல்: அபராதத் தொகையை இனி ஈ-சலானில்...! - Fine amount

கடலூர்: போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்கள் இனி ஈ-சலான் மூலமே அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் தெரிவித்துள்ளார்.

traffic

By

Published : Aug 8, 2019, 7:30 PM IST

கடலூர் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சமிக்ஞையில் (சிக்னல்) ஈ-சலான் முறையை கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் தொடங்கிவைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:

காவலர்கள் போக்குவரத்து விதிமீறிலில் ஈடுபட்டுவருபவர்களை வாகன தணிக்கை மூலம் ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம், தலைக்கவசம் அணியாதவர்கள் என வழக்குப்பதிவு செய்து நேரடியாக அபராதத் தொகையினை பெற்றுவந்தனர்.

இதனால் காவல் துறையினர் லஞ்சம் வாங்குவதாக ஒரு தவறான கண்ணோட்டம் பொது மக்களிடையே நிலவிவந்தது. இதனைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு புதிய முயற்சியை எடுத்துள்ளது.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ்
  • போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு ஆவணங்கள் இல்லாமல் வரக்கூடிய அனைத்து நபர்களும் காவல் துறையினரின் சோதனையில் சிக்கிக் கொண்டால் உடனடியாக பணம் கட்ட வேண்டும் என்பது அவசியமில்லை.
  • அதற்கு மாறாக இணையதளம் அல்லது இ-சேவை மூலமாக பணம் கட்டிவிடலாம். மேலும் வாகன சோதனையின்போது வாகனத்தில் உள்ள ஆவணங்களை காவல் துறையினர் வைத்திருக்கும் கருவிகளில் பதிவு செய்தால் வாகனத்தின் முழு விவரம் தெரிந்துவிடும்.
  • இதில் அந்த நபர் போலி எண் பதிவு செய்து வாகனம் ஓட்டினாலோ, வாகனத்தில் நிறம் மாற்றி ஓட்டினாலோ, வாகன ஓட்டுநர்களின் உரிமம் போலியா அல்லது அசலா என்பதையும் எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.
  • இந்தக் கருவியில் அந்த நபர் பற்றி முழுமையாக தெரிவதோடு அவரது புகைப்படமும் தெரியவரும். குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அளவுக்கு அதிகமாக ஆட்கள்-பொருட்களை ஏற்றிச் செல்வது, செல்ஃபோன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல் போன்றவற்றிற்கு உடனடியாக அந்த நபருடைய ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்துவிடலாம். இந்தக் கருவிகள் மூலம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வாகனங்களும் எந்த ஊர் என்ன பெயரில் உள்ளது என்பதை எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
  • மேலும் புதிய வாகன சட்டம் அமல்படுத்தினால் அதற்கு ஏற்றாற்போல் புதிய கருவிகளில் தானாக அபராதத் தொகை உள்ளிட்டவைகள் மாறிவிடும். அதன் பிறகு புதிய வாகன சட்டப்படியே அபராதத் தொகை வசூலிக்கப்படும்.
  • கடலூர் மாவட்டத்தில் தற்போது 30 புதிய கருவிகள் கொடுக்கப்படவுள்ளன. இதன் பிறகு காவல் அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details