தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணவனை கொலை செய்த மனைவி மற்றும் காதலருக்கு இரட்டை ஆயுள் தண்டனை! - தினேஷ்

கணவனை கொலை செய்த மனைவி மற்றும் காதலருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கணவனை கொலை செய்த மனைவி மற்றும் மனைவியின் காதலருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
கணவனை கொலை செய்த மனைவி மற்றும் மனைவியின் காதலருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

By

Published : Jul 28, 2022, 10:21 AM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பாண்டுரங்கன் தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன் மகன் தினேஷ் என்ற தினேஷ்பாபு (36). இவர் 2009 ஆம் ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த கல்பனா (34) என்பவரை காதலித்து வந்துள்ளார். மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கல்பனாவிற்கு அவரது முறை மாமனான பண்ருட்டி தட்டாஞ்சாவடியை சேர்ந்த துரை மகன் சீனுவாசனை 31.5.2012 அன்று திருமணம் செய்து வைத்தனர்.

பின்னர் இந்த தம்பதி சென்னை பட்டாளத்தில் குடியேறினர். இருப்பினும், பல்வேறு காரணங்களைக் கூறி கல்பனா தாம்பத்தியத்தை தவிர்த்து வந்துள்ளார். இதனிடையே கல்பனா, தனது காதலரான தினேஷ் உடன் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை சீனுவாசன் கண்டித்துள்ளார். எனவே இடையூறாக இருக்கும் சீனுவாசனை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முதலாமாண்டு திருமண நாளை கொண்டாட தம்பதி இருவரும் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து 1.6.2013 அன்று கடலூருக்கு சினிமா தியேட்டர் மற்றும் கடற்கரைக்கு சென்று விட்டு, பாலூர் வழியாக மோட்டார் சைக்கிளில் திரும்பிச் சென்றுள்ளனர். இதனை கல்பனா தனது செல்போனில் குறுஞ்செய்தியாக தினேஷிற்கு கூறியுள்ளார்.

தினேஷ், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான சண்முகம் மகன் முரளி என்ற முரளி கிருஷ்ணனை (36) உடன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது டி.ராசாப்பாளையத்தில் மோட்டார் சைக்கிளை தினேஷ் மறித்து, கத்தியால் குத்தி சீனுவாசனை கொலை செய்துள்ளனர். இதுகுறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில் கல்பனா தனது முன்னாள் காதலருடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின்போது முரளி அப்ரூவராக மாறி சாட்சியம் அளித்தார். இந்த வழக்கு விசாரணை கடலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நீதிபதி எஸ்.ஜவஹர் நேற்று (ஜூலை 27) தீர்ப்பு வழங்கினார்.

அதில், “முறை தவறிய காதலுக்காக கணவனை கொலை செய்த கல்பனா மற்றும் தினேஷ் ஆகியோருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனையும், ் கல்பனாக்கு ரூ.4,000 மற்றும் தினேஷுக்கு ரூ.3,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்ந்து இதுகுறித்து அரசு தரப்பு வழக்குரைஞர் ப.பக்கிரி கூறுகையில், “இரட்டை ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் முரளி அப்ரூவராக மாறியதால், அவரை வழக்கிலிருந்து விடுவித்தும் தீர்ப்பளித்துள்ளார்” என கூறினார்.

இதையும் படிங்க:சிறுமியின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டிய சிறுவன் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details