தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இனிமேல் நமக்குள் சாதிச்சண்டை வேண்டாம் - வேல்முருகன் கண்ணீர்

பண்ருட்டி: 30 ஆண்டுகளாக எதிர்த்த விடுதலை சிறுத்தைகள்தான் இன்று கட்டியணைத்து தனக்காக வேலை பார்ப்பதாகவும், இனிமேலும் நமக்குள் சாதிச் சண்டை வேண்டாம் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார்.

velmurugan
velmurugan

By

Published : Apr 3, 2021, 9:54 AM IST

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பண்ருட்டி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடுகிறார். பாமகவில் எம்எல்ஏவாக இருந்த வேல்முருகனுக்கு வன்னியர் சமூக மக்களிடையே பெரிய அளவில் ஆதரவு இருக்கிறது. அதேவேளையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் வேல்முருகனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.

இதனிடையே, நேற்று முதல் நாள் இவர்கள் இருவரும் ஒரே மேடையில் பண்ருட்டியில் பிரசாரம் செய்தது வன்னியர், தலித் ஒற்றுமையுடன், வாக்குகளையும் கவரும் யுக்தியாகவே பார்க்கப்படுகிறது. இது அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நேற்று பண்ருட்டி தொகுதியில் பிரசாரத்தின் போது பேசிய வேல்முருகன், தலித் மக்களையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும் புகழ்ந்தார். அப்போது உருக்கமாகி அவர் கண்ணீர்விட்டார்.

இனிமேல் நமக்குள் சாதிச்சண்டை வேண்டாம் - வேல்முருகன் கண்ணீர்

மேலும், வேல்முருகன் பேசும்போது, ”பாமகவில் இருந்த போது நம்பர் 2 வாக இருந்தேன். 30 ஆண்டுகள் பாமகவிற்காகவும் அதன் தலைமைக்காகவும் உழைத்தேன். ஆனால் அதை எல்லாம் நினைத்து பார்க்காமல் பாமகவே என்னை இப்போது அழிக்க பார்க்கிறது. என்னை வளர விடாமல் தடுக்க பார்க்கிறது. ஆனால், அதே 30 ஆண்டுகள் என்னை எதிரியாக பார்த்த விடுதலை சிறுத்தைகள் தான் இப்போது என் கூட இருக்கிறார்கள். சிறுத்தைகள்தான் என்னை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

வன்னியர்களே சிந்தியுங்கள். சாதி கடந்து நாம் இணைய வேண்டும். உங்களுக்காக சண்டை போட்டு, கோர்ட், கேஸ் என்று அலைந்தேன். யாருக்கு எதிராக சண்டை போட்டேனோ, அவர்கள்தான் எனக்காக இப்போது தேர்தல் வேலைகளை பார்க்கிறார்கள். என்னை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து, பாசமாக வரவேற்பு கொடுக்கிறார்கள். இனிமேல் நமக்குள் சாதிச் சண்டை வேண்டாம்” என்றார்.

இதையும் படிங்க: திமுக சுனாமியை போன்று ஆபத்தானது - டிடிவி. தினகரன்

ABOUT THE AUTHOR

...view details