தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவிக்கு பாலியல் தொல்லை.. செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் சஸ்பெண்ட்! - Chengalpattu News in Tamil

எம்பிபிஎஸ் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி முதுநிலை மருத்துவம் பயின்று வந்த மருத்துவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 1, 2023, 5:13 PM IST

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கண், நரம்பியல், காது மூக்கு தொண்டை, எலும்பியல், பச்சிளம் குழந்தை பிரிவு உட்பட பல பிரிவுகளின் கீழ் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இக்கல்லூரியில் 100 இளங்கலை மருத்துவ மாணவர்கள், 100 டிப்ளமோ மூன்றாமாண்டு செவிலியர்கள், நான்காம் ஆண்டு செவிலியர் பட்டப்படிப்பு படிப்போர் 50 பேர், முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் 88 பேர் எனப் பயின்று வருகின்றனர்.

இக்கல்லூரியில் ஒருபிரிவில் நேற்று முன்தினம் (மே 30) இறுதி ஆண்டு பயிலும் மாணவி ஒருவரிடம், முதுநிலை பயின்று வரும் மாணவரும் மருத்துவருமான ஜிதேந்திரன் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜஸ்ரீயிடம் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: துபாய், கோலாலம்பூரில் இருந்து தங்கம் கடத்தல்.. திருச்சியில் குருவி கைது.. சுங்கத்துறை விசாரணை!

இந்த புகாரின் அடிப்படையில் நேற்று காலை 10 மணி அளவில் விசாரணை நடைபெறுவதாக இருந்தது. இதனிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த சக மாணவர்கள் முதுகலை மாணவரின் இந்த செயலைக் கண்டித்து, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திடீரென திரளாக ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணை முதல்வர் அனிதா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் இந்த சம்பவம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக, விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் ஜிதேந்திரன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் இன்று (ஜூன் 1) இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த விசாரணை அறிக்கையை இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. மாணவி ஒருவருக்கு மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள புகார் சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஓசூரில் 'ஸ்பா' பெயரில் ஹைடெக் விபச்சாரம்.. 7 இளம்பெண்கள் மீட்பு.. 3 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details