கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவனை ஆதரித்து, கட்சியின் கொள்கை பரப்பு இணைச்செயலாளர் நடிகை விந்தியா, சேத்தியாதோப்பு பகுதியில் வாக்கு சேகரித்து பேசினார். அப்போது, “திமுக வெறும் விளம்பரத்தை நம்பி தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் எனக் கனவு காண்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. ஜெயலலிதாவையே சட்டமன்றத்தில் அவமானப்படுத்தியவர்கள்.
ஆ.ராசாவால் திமுகவிற்கு இம்முறை டெபாசிட் கூட கிடைக்காது - விந்தியா - புவனகிரி சட்டமன்றத் தொகுதி
கடலூர்: திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது அதிமுக பிரசாரத்தில் நடிகை விந்தியா குற்றஞ்சாட்டியுள்ளார்.
vindhya
திமுக என்றாலே திருடர்கள் முன்னேற்ற கழகம் என ஒரு பெயர் உண்டு. ஆ.ராசாவால் சென்ற முறை திமுக ஆட்சியை இழந்தது. அதேபோல இந்த முறை அவரால் திமுகவிற்கு டெபாசிட் கூட கிடைக்காது” என்றார்.
இதையும் படிங்க: ஒரு ரூபாய் இட்லி பாட்டியை நேரில் சந்தித்த திமுக வேட்பாளர்!