தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் 1,500 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்கிய திமுக

கடலூர்: ஆட்டோ ஓட்டுநர்கள் 1,500 பேருக்கு ரூ. 8 லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்கள் அடங்கி தொகுப்பை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோ. ஐயப்பன் வழங்கினார்.

By

Published : May 22, 2020, 12:09 PM IST

cuddalore-dmk
cuddalore-dmk

கரோனா வைரஸ் பரவல் காரணாக ஊரடங்கு உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பல தொழில்கள் முடங்கியுள்ளன. அதன்படி ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக சார்பில் அத்தியவசியப் பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில், கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் 1,500 பேருக்கு ரூ. 8 லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டன.

அவற்றை கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆலோசனையின் படி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோ. ஐயப்பன் வழங்கினார். முன்னதாக, சலவை தொழிலாளர்கள், பரம்பரிய இசைக்கலைஞர்கள், சிகை அலங்கார தொழிலாளர்கள் உள்ளிட்ட 500 பேருக்கு அத்தியாவசிய தொகுப்புகளை வழங்கினார். இந்த நிகழ்வில் திமுக கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் து. தங்கராசு, கடலூர் நகர செயலாளர் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள் வழங்கும் காவல் துறை

ABOUT THE AUTHOR

...view details