தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்தாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்'

கடலூர்: உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்தாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று திமுக தேர்தல் பொறுப்பாளர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

dmk
திமுக தேர்தல் பொறுப்பாளர் தேர்தல் அதிகாரியிடம் மனு

By

Published : Dec 21, 2019, 7:58 AM IST

கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த திமுக தேர்தல் பொறுப்பாளரும் மாதவரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சுதர்சனம், மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன், நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் சபா. ராஜேந்திரன், திமுக வழக்கறிஞர்கள் ஆகியோர் கூட்டாக சேர்ந்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புகார் மனுவை தேர்தல் அலுவலரிடம் அளித்தனர்.

பின்னர் திமுக தேர்தல் பொறுப்பாளர் சுதர்சனம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "நல்லூர் ஒன்றியத்தில் 19ஆவது வார்டில் போட்டியிட திமுக வேட்பாளர் கலைவாணி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவர் கையெழுத்தை போலியாக போட்டு அவர் மனுவை திரும்பப் பெற்றதாக அறிவித்துவிட்டு, அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர்.

திமுக தேர்தல் பொறுப்பாளர் தேர்தல் அதிகாரியிடம் மனு

இந்த அறிவிப்பை ரத்து செய்வதுடன் அந்த வார்டுக்கான தேர்தலை முறையாக நடத்தப்பட வேண்டும். ஆளுங்கட்சியினர் அலுவலர்களை மிரட்டி தேர்தலில் முறைகேடு செய்ய முற்படுவதை தடுக்க சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், உள்ளாட்சித் தேர்தலை நடுநிலைமையுடன் நியாயமாக நடத்தாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்” என்றார்.

இதையும் படிங்க: பாலியல் தொழிலுக்கு வர மறுத்த திருநங்கையின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்!

ABOUT THE AUTHOR

...view details