கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் எம்.சி. சம்பத் போட்டியிடுகிறார். அதேபோல் திமுக வேட்பாளராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன் போட்டியிடுகிறார்.
இதனிடையே அதிமுக வேட்பாளர் எம்.சி. சம்பத், அவரது குடும்பத்தார் மீது திமுக வேட்பாளர் ஐயப்பன் பரப்புரையின்போது தொடர்ந்து விமர்சித்துவருவதாகக் கூறப்படுகிறது.