கடலூர்: நெய்வேலியில் கடலூர்,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சார்ந்த பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தொழிலாளர் நல துறை அமைச்சர் கணேசன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன்,நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் பேசி அமைச்சர் அன்பில் மகேஷ், தற்போது இருக்கும் சூழ்நிலையில் பள்ளி கல்வி துறைக்கு மக்கள் மற்றும் ஊடக்கத்திலும் பாராட்டும் மற்றும் விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.
அனைத்து மாவட்டத்திலும் உள்ள சிஇஓ, டிஇஓ ஆகியோர் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிக்கு நேரடியாக சென்று அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும். ஆய்வின் போது பள்ளியின் வளர்ச்சிக்காக சிஇஓ தலைமை ஆசிரியர்களை கோபத்துடன் கேள்விகள் கேட்டால் அதனை தனிப்பட்ட பிரச்சனையாக கருதக் கூடாது.
கள்ளக்குறிச்சி சம்பவத்தால் பள்ளி கல்வித்துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டால் 2 வாரத்துக்குள் புத்தகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த 3 மாவட்டங்களிலும் பின்தங்கிய மாணவர்கள் அதிகம்வுள்ள மாவட்டம் கடலூர் மாவட்டம். அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.