கரோனா தொற்று தீவிரமடைந்ததுள்ளதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் மட்டும் வாங்கிச்செல்ல அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் பொருள்கள் வாங்க பொதுமக்கள் கூட்டமாக ஒன்று சேர்வதால் கரோனா தொற்று பரவும் சூழல் உருவாகும் என அஞ்சப்படுகிறது.
இதனை தடுக்கும் பொருட்டு முக்கியமான மார்க்கெட்டுகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. கடலூரில் இயங்கி வந்த முக்கியமான மார்க்கெட்டுகளையும் இடம் மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் கடலூர் உழவர் சந்தை, திருப்பாப்புலியூர் பாண்பாரி மார்க்கெட் ஆகியவை கடலூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இங்கு கடைகள் அமைக்கபட்டுள்ளன.