தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளி கடற்கரையில் விநாயகர் சிலை கரைப்பு - காவல்துறை பாதுகாப்பு - Police security at Silver Beach

கடலூர்: வெள்ளி கடற்கரையில் அரசு விதிகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

cuddalore
cuddalore

By

Published : Aug 24, 2020, 6:48 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடைவிதிக்கப்பட்டது.

அதேபோன்று அவரவர் வீட்டிலேயே கொண்டாட அறிவுறுத்தப்பட்டது. அதன்படி விநாயகர் சதுர்த்தியின் மூன்றாவது நாளான இன்று (ஆக.24) விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கடலூர் மாவட்டம் வெள்ளி கடற்கரையில், கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கடற்கரையில், விநாயகர் சிலையை கரைத்தனர். அப்போது தகுந்த இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.

மேலும், அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படும் வண்ணம் தடுக்க கடலூர் தேவனாம்பட்டினம் காவல்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:ஓ.பி.சி இட ஒதுக்கீடு : அதிமுக மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details