கடலூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டத் துறை சார்பில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. மாவட்ட நகர அரங்கில் தொடங்கிய இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். அதில், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கடலூரில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பேரணி - பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கடலூர்: பேரிடர் காலங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தொடங்கிவைத்தார்.
-cuddalore-cuddalore
பேரிடர் காலங்களில் தண்ணீர் குழாய்கள், மரங்களுக்கடியில் ஒழியக்கூடாது கால்நடைகளை மரம், கம்பத்தில் கட்டக் கூடாது உள்ளிட்டவைகள் அடங்கிய பதாகைகள் ஏந்திச் செல்லப்பட்டன. நகரின் முக்கியப்பகுதிகள் வழியாகச் சென்ற இந்தப் பேரணி மீண்டும் நகர அரங்கிற்கு வந்தடைந்தது.
இதையும் படிங்க: ஈரோடு அருகே மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி