கடலூர்:தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளரும், திரைப்பட இயக்குநருமான கௌதமன் Director Gauthaman இன்று (நவ.24) கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்தை சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " உலகப் புகழ்பெற்ற கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்களை தீட்சதர்கள் அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல், தங்களது சொகுசு வாழ்க்கைக்காக கோயிலை சிதைத்து வருகின்றனர். கோயிலில் தேவாரம், திருவாசகம் பாடி பக்தர்கள் அங்கு நின்று நடராஜரை வணங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், தீட்சதர்களால் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.