தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் வழிபட தீட்சிதர்கள் அனுமதிக்க வேண்டும்'

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆறு கால பூஜை முடிவுற்ற பிறகு, அரைமணி நேரத்திற்கு சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் வழிபட தீட்சிதர்கள் அனுமதிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.

natrajar
natrajar

By

Published : Jun 21, 2022, 10:01 PM IST

கடலூர்: உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அளித்தப்புகாரின் பேரில், கடந்த சில நாட்களாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
அதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் நடராஜர் ஆலயம் சம்பந்தமான தங்களது கருத்துகளை கடலூரில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழ்ப்பேரவை மக்கள் அதிகாரம், முத்தமிழ்ப் பேரவை, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, மறுமலர்ச்சி வன்னியர் உரிமை பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட அமைப்பினர், திருக்கோயில் கனகசபை மீது ஏறி நின்று பக்தர்கள் வழிபடவும், தேவாரம் திருவாசகம் திருமுறைகளை ஓதி வழிபடவும் தீட்சிதர்கள் அனுமதி மறுப்பதாக இணை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், நடராஜர் ஆலய பொது தீட்சிதர்கள் நிர்வாகத்திற்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் ஆறு கால பூஜைகள் முடிந்த பின், அரை மணி நேரத்திற்கு சிற்றம்பல மேடையில் பக்தர்கள் தேவாரம், திருவாசகம் ஓதி வழிபடுவதற்கு பொது தீட்சிதர்கள் அனுமதிக்க வேண்டும். விருப்பம் உள்ள பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, இதர பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம், கட்டணம் ஏதும் செலுத்தாமல் தேவாரம், திருவாசகம் உள்ளிட்டவற்றை ஓதி வழிபடலாம். இதை திருக்கோயில் நிர்வாகம் மறுக்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சிதர்கள் மீது குவியும் புகார் - 4 பேர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details