தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறையினர் ஆய்வுக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறையினர் ஆய்வுக்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். வரவு செலவு கணக்கு விவரங்களையும் தர தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர்.

dikshits
dikshits

By

Published : Jun 7, 2022, 7:01 PM IST

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை அதை நிர்வகித்துவரும் தீட்சிதர்கள் அபகரித்து வருவதாகப் பல்வேறு புகார்கள் எழுந்தன. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

இதனிடையே நேற்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சென்றிருந்தார். சாமி தரிசனம் செய்த பின்னர், தீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’அறநிலையத்துறை அலுவலர்கள் நடராஜர் கோயிலில் ஆய்வு செய்யவுள்ளதாக’ தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்றது. அவர்கள் கோயிலை நிர்வகிக்கும் தீட்சிதர்களிடம் வரவு செலவு கணக்குகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள விவரங்களைக் கேட்டனர். இதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டிய தீட்சிதர்கள் கணக்கு விவரங்களை அறநிலையத்துறை அலுவலர்களிடம் வழங்க மறுத்துவிட்டனர். மேலும், கோயிலில் ஆய்வு நடத்தவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:நடராஜர் கோயிலில் ஆய்வுக்கு அனுமதிக்காவிட்டால், தீட்சிதர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு அதிரடி!

For All Latest Updates

TAGGED:

Cuddalore

ABOUT THE AUTHOR

...view details