கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தை பொது தீட்சிதர்கள் நிர்விகித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக தீட்சிதர்கள் மீது பல்வேறு புகார்களும், சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. குறிப்பாக கோயில் பூஜை செய்வதற்காக குழந்தைகளுக்கும் தீச்சதர்களுக்கும் திருமணம் செய்யப்பட்டுவருவதாக புகார் எழுந்தது.
இந்த புகாரையடுத்து கடந்த சில வாரங்களாக இரு வழக்குகளில் எட்டுக்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று(அக்-15) மூன்றாவது வழக்காக கோவில் செயலர் மகளுக்கு குழந்தை திருமணம் செய்துவைத்தாக நடராஜர் கோவிலில் செயலாளராக இருக்கும் ஹேமசபேச தீட்சிதர் கைது செய்யப்பட்டார். 2021ஆம் ஆண்டு அவருடைய 13 வயது மகளுக்கு திருமணம் செய்ததாக சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.