தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தோனி ஃபேன்னா சும்மாவா... வீட்டை மஞ்சள் நிறத்தில் மாற்றிய ரசிகர்!

கடலூர்: தோனியின் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக தோனியின் ரசிகர் ஒருவர், தனது வீட்டினை மஞ்சள் நிறத்தில் மாற்றியதோடு தோனியின் புகைப்படத்தையும் வரைந்துள்ளார்.

dhoni-fan-changed-his-home-colour-in-yellow-with-dhoni-face
dhoni-fan-changed-his-home-colour-in-yellow-with-dhoni-face

By

Published : Oct 13, 2020, 3:42 PM IST

Updated : Oct 13, 2020, 7:17 PM IST

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன். இவர் துபாயில் உள்ள ஆன்லைன் டிரேடிங் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

தீவிர கிரிக்கெட் ரசிகரான கோபிகிருஷ்ணன், கிரிக்கெட் வீரர் தோனி மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். தோனி விளையாடும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஆர்வத்தோடு கண்டுகளித்தவர், தற்போது விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், தோனி மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒன்றரை லட்சத்திற்கும் மேல் செலவு செய்து சிஎஸ்கே அணியின் ஜெர்சி போல தனது வீடு முழுமைக்கும் டிசைன் செய்து, தோனி படத்தினை வரைந்துள்ளார்.

வீட்டை மஞ்சள் நிறத்தில் மாற்றிய ரசிகர்

அதனோடு வீட்டின் நுழைவாயில் பகுதியில் ஹோம் ஆப் தோனி ஃபேன் என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது. தோனிக்காக மாற்றி அமைக்கப்பட்ட இந்த வீட்டினை ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் கண்டு ரசித்து வருகின்றனர். இந்த வீட்டின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தோனியின் தீவ்ர ரசிகரான கோபிகிருஷ்ணன்

இந்நிலையில் தோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் கூறுகையில், ''துபாயில் எப்போது இந்திய அணிக்காக தோனி ஆடினாலும் வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு கிரிக்கெட் பார்க்க சென்றுவிடுவேன். தோனிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். சிஎஸ்கே மீதும், தோனி மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. தல எப்போதும் தல தான். அதனால் பாசிட்டிவ்வாக செய்ய வேண்டும் என நினைத்து வீட்டினை சிஎஸ்கே ஜெர்சி நிறத்தில் மாற்றினேன். எனது அப்பாவும் எனக்கு உதவி செய்தார்'' என்றார்.

இதையும் படிங்க:சாதனைப் படைத்த சோயிப் மாலிக் - வாழ்த்து தெரிவித்த சானியா!

Last Updated : Oct 13, 2020, 7:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details