தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டம் - கண்டன ஆர்ப்பாட்டம் - cuddalore district news today

கடலூர்: தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

caa against protest
caa against protest

By

Published : Jan 14, 2020, 5:06 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்துவருகிறது. தேசிய மற்றும் மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது எதிர்ப்புக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர். அசாம் மாநிலத்தில் தொடங்கப்பட்ட எதிர்ப்பு நாடு முழுவதும் பரவியுள்ளது. மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுதுவதற்கு 15,93,452 பேர் விண்ணப்பம்

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு கடலூர் மாவட்ட மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார். இதில், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம்

மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நகர செயலாளர் ராஜா, விசிக மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.பாலாஜி உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details