கடலூர்:ஆடி மாதம் என்றாலே கோவில்களில் திருவிழா களைகட்டுவது வழக்கம். ஆடி மாதத்தில் வரும் நான்கு வெள்ளிக்கிழமைகளிலும் கோயில்களில் திருவிழா என்பது விமரிசையாக நடைபெறும். மேலும், அந்தந்த பகுதி ஊர் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் பகுதிகளில் கோயில் திருவிழாவை நடத்துவர். இதுபோன்று விசேஷ தினங்களில் சுவாமியை அலங்காரம் செய்து வீதி உலா அழைத்து வருவதில், ஊர்மக்கள் பெருமளவில் நாட்டம் கொண்டிருப்பர்.
மேலும், திருவிழா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை கொண்டாட்டமும், ஆர்வமும் அதிகரித்துவிடும். சண்டைகள், மகிழ்ச்சி, குதூகலம் என நிறைந்து காணப்படும் திருவிழாவில் சில எதிர்பாராத அசம்பாவிதங்களும் அவ்வப்போது நிகழ்ந்தேறி விடுகின்றன. அப்படி நேற்று நள்ளிரவு (ஆகஸ்ட் 10) கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எவரும் எதிர்பாராத வகையில் நடந்த விபத்து, அனைவரையும் ஆழ்ந்த சோகத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே சிறுதொண்டமாதேவி கிராமத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு முத்தாலம்மன் கோயிலில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், விடிய விடிய ஊரைச்சுற்றி வீதி உலா நடைபெற்றது. இதில் சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு, வீதி உலா வந்த சாமியை தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:அரசு மருத்துவர்களின் கோரிக்கைக்கு 13 வயதாகிறது.. அன்புமணி ராமதாஸ் அறிக்கை!