தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கடலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில்முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் நலன் கருதி ரூ.47 கோடி ஒதுக்கீடு - ககன்தீப் சிங் பேடி - ககன்தீப் சிங் பேடி
கடலூர்: விவசாயிகளின் நலன் கருதி 47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
deepu-singh-bedi-press-meet-at-cuddalore
இந்த நிலையில் வேளாண்மை துறை முதன்மை செயலாளரும், கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ககன்தீப் சிங் பேடி, வடகிழக்கு பருவமழை பணிகள் குறித்து இன்று காலை கடலூர் மாவட்டத்துக்கு ஆய்வு செய்ய வந்தார். இதனைத் தொடர்ந்து ககன்தீப் சிங் பேடி கூறியதாவது.
- கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அருவா மூக்கு திட்டம் மற்றும் தடுப்பணைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தொடங்குவதற்கும், அதற்கான டெண்டர் விடும் பணிகள் தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளோம்.
- வேளாண்மை துறை சார்பில் மக்காச்சோளத்தில் படைப்புழு தடுப்பதற்காகவும், விவசாயிகளின் நலன் கருதியும் 47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- வடகிழக்கு பருவ மழையையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் கடலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் மழையால் பாதிக்கப்பட்டால் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுக்கு பாதிப்புகளை எதிர்நோக்கும் விதமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
- தமிழ்நாடு முழுவதும் தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வேளாண்மைத் துறை சார்பாக விவசாயிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டில் வேளாண்மைத்துறை சார்பில் கடந்த 2 1/2 வருடத்தில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- விவசாயிகள் பயிர் காப்பீட்டு செய்திருந்தால், பாதிப்பு ஏற்படும்போது இதன்மூலம் பயன் அடைந்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார்.
இதையும் படிக்க: 'அனைத்து மாவட்டங்களிலும் மித மழைக்கு வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம்!