கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் கடந்த மே 7ஆம் தேதி, பாய்லர் வெடித்து எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த எட்டு பேரை திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் சர்புதீன், சண்முகம் ஆகியோர் உயிரிழந்த நிலையில், அந்த நிறுவன நிரந்தரத் தொழிலாளி பாவாடை(45) என்பவர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்தார்.