தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. காய்கறி கடைகள், சிறு மளிகை கடைகள், பெட்டிக் கடைகள், உணவகங்கள், தேநீர் கடைகள் ஆகியவை மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் திறந்துள்ளது.
ஊரடங்கு எதிரொலி: கடலூரில் வெறிச்சோடி காணப்பட்ட பூ மார்க்கெட் - coronavirus
முழு ஊரடங்கு காரணமாக கடலூரில் பூ மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
கடலூரின் முக்கிய சாலைகளான லாரன்ஸ் சாலை, பாரதி சாலை, நேதாஜி ரோடு, கடலூர் மத்திய பேருந்து நிலையம், திருப்பாதிரிப்புலியூர் உட்பட நகரின் பல்வேறு சாலைகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மேலும் பேருந்து நிலையங்களும், சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
இதேபோன்று திருப்பாதிரிப்புலியூர் பூ மார்க்கெட் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இருந்தும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் அவை வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக நகரின் பல்வேறு பகுதிகளில் காவல்துறை மூலம் சோதனை சாவடி அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.