கடலூர் மாவட்டம் சிதம்பரம், அண்ணாமலை பல்கலைகழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து விதமான நோய்களுக்கும் மருத்துவம் பார்க்கும் வசதி உள்ளது. இதில் டயாலிசிஸ் பிரிவு கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அரசு மாவட்ட மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இம்மருத்துவனையில் கடந்த பல மாதங்களாக ஆயங்குடி கிராமத்தைச் சேர்ந்த அப்துல் புகாரி(28) என்பவர் டயாலிசிஸ் செய்து வந்தார். இந்தநிலையில் இன்று டயாலிசிஸ் செய்ய சென்ற அவரை மருத்துவர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். இதையடுத்து அவர் ஏழ்மை நிலையில் உள்ளதால் வேறு எங்கும் சென்று வைத்தியம் பார்க்க இயலாது. என் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி திடீரென போராட்டத்தை நடத்தினார்.