கடலூர் மாவட்டம் தொண்டங்குறிச்சியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் நாராயணசாமி (56), தனது இருசக்கர வாகனத்தில் ஜூலை 4ஆம் தேதி சேலம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஈரோடு மாவட்டம் ஓடைகாரன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவரின் மகன் சண்முகம் (38), லிஃப்ட் கேட்டு வாகனத்தை நிறுத்தி உள்ளார். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி, நாராயணசாமியை தாக்கி அவரது பாக்கெட்டில் இருந்த ரூ. 500 பறித்து சென்றுள்ளார்.
இது தொடர்பாக நாராயணசாமி வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சண்முகத்தை கைது செய்து விசாரித்ததில், இவர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததும், வேப்பூர் காவல் சரகம் பெரிய நெசலூர் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவர் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 14 பவுன் நகை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.