தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உள்ளாட்சித் தேர்தல் பணி புறக்கணிப்பு' -  விஏஓக்கள் அறிவிப்பு! - கடலூர் விஏஓகள் ஆர்பாட்டம்

கடலூர் : தேர்தல் சம்பளம் வழங்கப்படாததால் உள்ளாட்சித் தேர்தல் பணியைப் புறக்கணிக்க போவதாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.

Cuddalore Vao protest
Cuddalore Vao protest

By

Published : Dec 6, 2019, 9:41 PM IST


கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் சீ.சந்தான கிருஷ்ணன், ' கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடலூரில் அனைத்துக் கிராம நிர்வாக அலுவலர்களும், கிராம உதவியாளர்களும் பணியாற்றியுள்ளனர்.

அவர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 50 விழுக்காடு வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது. ஆனால், இந்த அரசாணையின்படி சம்பளம் வழங்காமல் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே வழங்குகின்றனர். இதனை மாவட்டம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களும், கிராம உதவியாளர்களும் பெறுவதில்லை என்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் கூறியுள்ளோம்.

கடலூர் விஏஓக்கள் ஆர்ப்பாட்டம்

அதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை என குற்றம்சாட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். மேலும், இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையர், உள்துறைச் செயலரிடம் இதுபற்றி புகார் தெரிவித்து அடுத்த கட்ட போராட்டம் அறிவிப்போம்' எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை பணிகளையும், உள்ளாட்சித் தேர்தல் பணிகளையும் புறக்கணிக்கப்போவதாக கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சித்த பீகார் இளைஞர் - பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

ABOUT THE AUTHOR

...view details