கடலூர் பாதிரிக்குப்பம் வண்டிப்பாளையம் சாலையில் ஏப்ரல் 23ஆம் தேதி திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமாரய்யா மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மூன்று டிராக்டர் டியூப்களில் 1200 லிட்டர் கள்ளசாராயம் விற்றுக்கொண்டிருந்த வண்டிபாளையத்தை சேர்ந்த சுந்தரி (66) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுந்தரி மீது ஏற்கனவே திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் எட்டு வழக்குகளும் கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் ஏழு வழக்குகளும் உள்ளன.
கடலூரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது
கடலூர் : மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் முக்கிய குற்றவாளிகளான இரண்டு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுந்தரி, விமல்ராஜ்
இந்நிலையில், குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், சுந்தரியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.இதேபோன்று பள்ளி மாணவிகளை கேலி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட விமல்ராஜ் என்பவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Last Updated : May 2, 2019, 12:07 PM IST