தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மதுபான குடோனில் ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்! - Contract workers in Gudon suddenly strike

கடலூர்: கூலியை அதிகரிக்ககோரி அரசு மதுபான குடோனில் ஒப்பந்த தொழிலாளர்கள் திடீரென காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்
கடலூர்

By

Published : Jan 12, 2021, 10:50 PM IST

கடலூர் சிப்காட் பகுதியில் கடலூர் மாவட்ட டாஸ்மாக் கிடங்கு அமைந்துள்ளது இதில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சுமைதூக்கும் தொழிலாளர்கள் பணி செய்து வருகிறார்கள் இவர்களுக்கு ஏற்றுக் கூலியாக பெட்டி ஒன்றுக்கு EPFஇல் 15 பைசா பிடித்தம் செய்தது போக ரூபாய் 1.20 மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் பெட்டி ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூபாய் 2.50 வரை வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக பல மாதங்களாக டாஸ்மாக் மேலாளர் இடமும் ஒப்பந்ததாரர் இடமும் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று, கூலி உயர்வு வழங்காததை கண்டித்து 60க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு மதுபான கிடங்கிலிருந்து நாள் ஒன்றுக்கு மாவட்டம் முழுவதும் ரூபாய் 5 கோடியே 76 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் ஏற்றப்படுவது தேக்கம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details