தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்ஃபோனைப் பறித்து, இளைஞர்களை மிரட்டும் பெண் உதவி ஆய்வாளரின் வீடியோ! - கடலூர் சப்-இன்ஸ்பெக்டர் இளைஞர்களை அச்சுறுத்தும் வைரஸ் வீடியோ

கடலூர்: இளைஞரின் செல்ஃபோனை பறித்து வைத்துக் கொண்டு, காவல் நிலையம் வரவழைத்து இளைஞர்களை மிரட்டிய பெண் உதவி ஆய்வாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

viral video

By

Published : Nov 12, 2019, 7:16 PM IST

Updated : Nov 12, 2019, 8:32 PM IST

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் உத்தராம்பாள். இவர் பணி முடிந்து புதுச்சேரியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் முன்பாக இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்ஃபோனில் பேசிக்கொண்டே சென்றுள்ளார். இதனைக் கண்ட உத்தராம்பாள் அந்த இளைஞரை வழிமறித்து செல்ஃபோனை பறிமுதல் செய்து, காவல் நிலையத்தில் வந்து செல்ஃபோனை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அந்த இளைஞர் காவல் நிலையத்திற்குச் சென்று பார்த்தபோது, அந்தபெண் உதவி ஆய்வாளர் அங்கு இல்லை எனவும்; புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் தனது வீட்டிற்குச் சென்று விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்பின், பெண் உதவி ஆய்வாளர் உத்தராம்பாள் மாலை மீண்டும் பணிக்கு வந்துள்ளார். இதையறிந்த அந்த இளைஞர் அவரது நண்பர்கள் சிலருடன் செல்ஃபோனில் கேமராவை ஆன் செய்து கொண்டு காவல்நிலையம் உள்ளே சென்றுள்ளார்.

அப்போது, அந்த இளைஞரையும், நண்பர்களையும் பெண் உதவி ஆய்வாளர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக செல்ஃபோனில் பதிவு செய்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், 'நான் செய்தது தவறுதான். அதற்கு வருத்தம் தெரிவித்தேன். ஆனால் நீங்கள் செல்ஃபோனை பறிமுதல் செய்துகொண்டு காவல் நிலையத்திற்கு வராமல், வீட்டுக்கு ஏன் எடுத்துச் சென்றீர்கள். நீங்கள் கூடத்தான் தலைக்கவசம் அணியாமல் சென்றீர்கள்' என அந்த இளைஞர் கேள்வி எழுப்புகிறார்.

இளைஞர்களை மிரட்டும் பெண் உதவி ஆய்வாளர் வைரல் வீடியோ

மேலும், அவருடன் வந்த நண்பர்களும் 'செல்ஃபோனை எப்படி பிடுங்கலாம். அபராதம் போடவேண்டியது தானே' எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பெண் உதவி ஆய்வாளர், 'நீ யாரு? உனக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? வெளியே போ? இது என் காவல்நிலையம்' என அந்த நண்பர்களை பார்த்து எச்சரிக்கிறார். 'இது மக்களுக்கான இடம் என்று அவர்கள் கூற, நீ கலெக்டர்கிட்ட போய் சொல்லு; இல்ல யாருகிட்ட வேண்டுமானாலும் போய் சொல்லு, எனக்கு பயம் இல்லை' பெண் உதவி ஆய்வாளர் மிரட்டுகிறார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டு மீனவர்கள் மீது ஆந்திர மீனவர்கள் தாக்குதல் - வைரல் காணொலி

Last Updated : Nov 12, 2019, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details