கடலூர்: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் கடலூரில் முக்கிய பகுதிகளான இம்பீரியர் சாலை, லாரன்ஸ் சாலை, பாரதி சாலைகளில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்குவதற்குப் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
மேலும் நாளை முதல் பள்ளிகளுக்குத் தீபாவளி விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல துவங்கி உள்ளனர்.
கூட்ட நெரிசல் உள்ள பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படுவதால் கூடுதலாகப் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற கூட்ட நெரிசல் இருக்கும் பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம் என்பதால் போலீசார் பொதுமக்களை விழிப்புணர்வாக இருக்கும் படி ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.
கடலூர் கடைவீதியில் கடல் அலையென மக்கள் கூட்டம் இதையும் படிங்க:கடலூர் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவு..!