தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் ஆறாயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு!

கடலூர்: நேற்று (ஆக.14) ஒரே நாளில் 222 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதால் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆறாயிரத்தை தாண்டியுள்ளது.

hospital
hospital

By

Published : Aug 15, 2020, 3:59 AM IST

கரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த கடலூர் மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என்றும், மருத்துவம் தொடர்பான ஏதேனும் சந்தேகமிருந்தால் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் ஏற்கனவே கரோனா தொற்றால் 5 ஆயிரத்து 944 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (ஆக.14) மேலும் 222 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 166ஆக உயர்ந்துள்ளது. 2 ஆயிரத்து 306 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துமனைகளில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 410 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை முடிந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 598 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 74 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் தரையிறங்கிய தல தோனி & கோ

ABOUT THE AUTHOR

...view details